"மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும்" - திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தல்
ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நேரத்தில், மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று, ஏன் அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் புரியவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"கொரோனா பேரிடர் காலத்திற்கும்" "சாதாரண காலகட்டத்திற்கும்" வேறுபாடு தெரியாமல் அரசு நடக்கிறது என்பதை "உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை" என்பது போல் மின்துறை அமைச்சர் தங்கமணி தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.
ஊரடங்கு கால மின்கட்டணம் சுமைதாங்கிகளாக மாறியிருக்கும் மக்களுக்கு, எளிய தவணையில் மின்கட்டணத்தை செலுத்த அனுமதி கொடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டால் அதை அரசு செய்யத் தயங்குவது ஏன்? என்று, கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் குறைகளைத் தீர்க்க தயங்கும் அதிமுக அரசு, ஊரடங்கு கால டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துவது ஏன்? என்றும், மக்களுக்காக, தேவையில்லாத டெண்டர்களை ஒத்தி வைத்து, மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைமுருகன்வலியுறுத்தியுள்ளார்
Next Story