கொரோனா உயர்தர சிகிச்சைக்கு ரூ. 76.55 கோடி மதிப்பில் 2,414 அதிநவீன ஆக்சிஜன் கருவிகள்
கொரோனா உயர்தர சிகிச்சைக்கு 76.55 கோடி ரூபாய் மதிப்பில் 2,414 அதிநவீன ஆக்சிஜன் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்கட்டமாக 530 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக 1 நிமிடத்திற்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் உயர் ஓட்ட ஆக்சிஜன் வழங்கும்போது கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் தீவிர மூச்சுத்திணறல் குறைந்து நுரையீரல் பாதிப்பும் தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story