கொரோனா நிவாரண நிதி எவ்வளவு? : "8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிடுக" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து எட்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி விவரங்களை வெளியிட அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கற்பகம் வழக்கு தொடர்ந்திருந்தார். கொரோனா நிவாரண நிதியாக வந்துள்ள நன்கொடை தொகை, பயனாளிகள் எண்ணிக்கை என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை என மனுதாரர் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, நிவாரண நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிரமம் உள்ளது எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், எட்டு வாரங்களுக்குள், கொரோனா நிவாரண நிதி விவரங்களை இணையதளத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story