8 மாதம் கர்ப்பமான சிறுமி - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

வேலூரில் உறவுக்கார சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
8 மாதம் கர்ப்பமான சிறுமி - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
x
வேலூர் மாவட்டம் சதுப்பேரியை சேர்ந்தவர் எட்வின். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே 13 வயதான தன் உறவுக்கார சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறை செய்துள்ளார். இதனிடையே சிறுமிக்கு தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்படவே மருத்துவமனைக்கு சென்ற போது தான் அவர், 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மாவட்ட சமூக நலத்துறையில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார், எட்வினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்