"நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் தேவை" - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, வாழைக் குறிச்சி, இடங்கண்ணி, சோழமா தேவி உள்ளிட்ட பல கிராமங்களில் நவரை பட்டத்தில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி, வாழைக் குறிச்சி, இடங்கண்ணி, சோழமா தேவி உள்ளிட்ட பல கிராமங்களில் நவரை பட்டத்தில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். பயிர் விளைச்சலுக்கு தயாரான நிலையில், தற்போது அங்கு இயந்திரங்கள் உதவியுடன், நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தாண்டு, நவரை பட்டத்தில் நல்ல விளைச்சல் கிடைத்து உள்ளதாகவும்,சம்பா, குறுவை போல, நவரை பட்டத்திற்கும் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story