ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மருத்துவமனைக்கு முன்பே அழைத்து வந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் - மருத்துவர் பாலசுப்ரமணியன்
சிறையில் இருந்து காயங்களுடன் வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மருத்துவமனைக்கு முன்பே அழைத்து வந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் என அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்
மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து வரப்படும் போது அவர்களின் பின்புறத்தில் காயங்கள் இருந்ததாக சிகிச்சை அளித்த டாக்டர் பாலசுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
* மருத்துவனையில் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கும், சிறைச்சாலையில் வழங்கப்படும் சிகிச்சை முறைக்கும் வித்தியாசம் உள்ளது என கூறியிருக்கும் அவர், சிறையில் முதலுதவி மட்டுமே வழங்க முடியும் என்றும், மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என விளக்கியுள்ளார்.
* மோசமான நிலையில் பென்னிக்ஸ் வந்ததாக கூறும் மருத்துவர், 8 மணிக்கு வந்த அவர் 9 மணிக்கு உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
* ஆனால் ஜெயராஜ் நன்றாக தான் இருந்தார் என்றும், அவரின் புகைப்படங்கள் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
* ஜெயராஜூக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை அதிகமாக இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் டாக்டர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
* சிறையில் இருந்து காயங்களுடன் வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மருத்துவமனைக்கு முன்பே அழைத்து வந்திருந்தால் பிழைத்திருப்பார்கள் என்றும் தொடர்ந்து மருத்துவர்கள் ஜெயராஜை கண்காணித்து வந்த போதிலும், திடீரென அவர் இறந்து விட்டதாக நீதிபதி விசாரணையில் டாக்டர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story