ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். வேல்முருகனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story