சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த விவகாரம் - அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த விவகாரம் - அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை
x
சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சாத்தான்குளத்தில் உயிரிழந்த இருவரது பிரேத பரிசோதனை அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத் திணறலாலும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும் இறந்ததாக முதலமைச்சர் எதனடிப்படையில் சொன்னார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தவறு அரசின் பக்கம் என்பதால்தான் 25 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இயற்கையான மரணம் என்றால் எப்படி அரசின் இழப்பீடு வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை,  முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்கு தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்