தண்டனை காலத்துக்கு முன்பே சசிகலா விடுதலை...

கர்நாடக சிறையில் இருந்து, தண்டனை காலத்துக்கு முன்பே சசிகலா விடுதலையாகிறார் என்ற செய்தி அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தண்டனை காலத்துக்கு முன்பே சசிகலா விடுதலை...
x
ஜெயலலிதாவுடன் சிறை தண்டனை பெற்ற சசிகலா, 2017 பிப்ரவரி 14ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார். அதுமுதல், அவர் குறித்த சர்ச்சையும், விடுதலை குறித்த தகவலும் தொடர்கின்றன. இதனிடையே, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ளார் என பாஜக பிரமுகர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, பரப்பன அக்ரஹார சிறைவிதிப்படி, ஓராண்டுக்கு ஒருமாத விடுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, 4 ஆண்டு தண்டனை காலத்தில் 4 மாதம் கழிக்கப்படுகிறது. தீர்ப்புக்கு முன் 16 நாட்கள் சிறையில் இருந்ததால், தண்டனை காலத்தில் அதுவும் கழிக்கப்படுகிறது. சிறையில், கன்னட மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து சசிகலா பயின்றதாகவும், அதனால், 60 நாட்கள் சிறைக் கண்காணிப்பாளர் சலுகை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா, இதுவரை செலுத்தவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும், சுதந்திரத்துக்கு முதல் நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி, சசிகலா விடுதலையாகிறார் என்ற தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்