உரிய படிப்பில்லாமல் மருத்துவம் - 16 போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் உரிய கல்வித்தகுதி இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 16 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உரிய படிப்பில்லாமல் மருத்துவம் - 16 போலி மருத்துவர்கள் கைது
x
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், மருத்துவ குழு ஒன்றை திடீர் சோதனை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரி ஐயப்பன் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கலவை, திமிரி,சோளிங்கர், நெமிலி அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உரிய கல்வித் தகுதி போலி மருத்துவர்கள் வைத்தியம் பார்த்து வந்தது தெரிய வந்தது.  இதனையடுத்து, மொத்தம் 16 போலி மருத்துவர்களை கைது செய்து அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைந்த மருத்துவக்குழுவினர், அனைத்து கிளீனிக்குகளையும் மூடி சீல் வைத்தனர். அவர்கள் வைத்திருந்த மருந்துகளை முழுவதுமாக பறிமுதல் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்