சாத்தான்குளம் சம்பவம்- தலா 10 லட்சம் நிதி உதவி ஒருவருக்கு அரசு வேலை

போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
x
போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.. மேலும்,  சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே இரண்டு எஸ்.ஐ.க்கள், 2 தலைமை காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்