ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு - கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கண் மருத்துவமனை டீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க கோரி விமல் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்கக் கோரியும், 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன் லைன் வகுப்புக்களை நடத்த உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, ஆன் லைன் வகுப்புக்களில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் கண்பாதிப்பு குறித்து 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க , அரசு கண் மருத்துவமனை டீன்-னுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்து உள்ளனர்.
Next Story