மாட்டு தீவன வியாபாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி - கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏமாந்த வியாபாரி
vவேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மாட்டு தீவனக்கடை நடத்தி வரும் நரேந்திர ரெட்டி, ரூபாய் 20 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.
vவேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே மாட்டு தீவனக்கடை நடத்தி வரும் நரேந்திர ரெட்டி, ரூபாய் 20 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. , 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக எடுத்து கொண்டு, அதிக கமிஷன் பெறும் ஆசையில், உமாமகேஸ்வரி என்பவரை சந்திக்க, நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். வாலாஜாப்பேட்டை அருகே உமா மகேஸ்வரியிடம் பணத்தை அளித்த அவர்கள், அவரது காரை பின்தொடர்ந்தனர். அப்போது, அம்மூர் என்ற இடத்தில், போலீசார் தடுத்து நிறுத்தி, பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், உமா மகேஸ்வரி என்ற பெண் திட்டமிட்டு, போலீஸ் போல கும்பலாக ஏமாற்றியதை கண்டறிந்தனர். அந்த கும்பலில் 6 பேரை கைது செய்த போலீசார், கார் மற்றும் 20 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான முக்கிய குற்றவாளியான உமா மகேஸ்வரியை தேடி வருகின்றனர்
Next Story