50 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத கிராமங்கள் - ரூ.13.6 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஆண்டுகாலமாக சாலை வசதி இல்லாத பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைப்பட்டி, செம்மம்பட்டி, உள்செக்கடி என ஐந்து மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், கல்வராயன் மலையிலிருந்து நான்கு புள்ளி 6 கிலோமீட்டர் தொலைவிற்கு 13 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை இரு சக்கர வாகனத்தில் சென்றும், 2 புள்ளி 6 கிலோமீட்டர் நடந்தே சென்றும் பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது அவரை மலைவாழ் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, மலைவாழ் மக்களிடம் இருந்து மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்டார்.
Next Story