"கொரோனா நிதியுதவி, அரசு வழங்க வேண்டும்" - இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் தாக்கல் செய்த இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கொரோனா நிதியுதவி, அரசு வழங்க வேண்டும் - இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
x
கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் தாக்கல் செய்த இடைக்கால மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த  தன்ராஜ் என்பவர் இந்த இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை, செப்டம்பர் இறுதி வாரத்தில் விசாரிப்பதாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்  தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்