"அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும்" - ஆணையர் ஏகே.விஸ்வநாதன்

சென்னையில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகர ஆணையர் ஏகே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
x
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணியாளர்கள் சென்னையில் இருந்து புறநகருக்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறினா​ர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்க 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வாங்கலாம் என்று தெரிவித்தார். ஏற்கனவே இ பாஸ் பெற்றுள்ளவர்கள் மீண்டும் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று கூறினார். அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்படும் என்று கூறினார். அனுமதி இல்லாமல்  வாகனத்தில் சுற்றினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்