விருதுநகர் : காவலருக்கு கொரோனா -காவல்நிலையம் மூடல்
விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பணிபுரிந்த போக்குவரத்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது. இதையடுத்து விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் 21 காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதார துறையினர் முடிவு செய்து உள்ளனர்
Next Story