மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு - லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணி அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணி அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை முற்றுகையிட்டு கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மணல் குவாரி அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
Next Story