பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.3,000 கோடி வழங்க கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவலை தடுப்பது குறித்து, பிரதமர் நரேந்திரமோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி,
* தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
* 2020-21-ம் நிதியாண்டுக்கான உள்ளாட்சி அமைப்பு நிதியில் 50 சதவீதத்தை வழங்க வேண்டும் என்றும்,
* சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.1000 கோடியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
* தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என்றும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
* கொரோனா தடுப்பு பணிக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர் எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில்
மத்திய அரசுக்கு தமிழகம் ஆதரவாக இருக்கும் என கூறியுள்ளார்.
Next Story