குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள் - தீயில் கருகிய பள்ளி மாணவி

வேலூர் மாவட்டம் பாகாயம் அருகே குளிப்பதை வீடியோ எடுத்து பாலியல் உறவுக்கு அழைத்ததால் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பள்ளி மாணவி அளித்துள்ள வாக்கு மூலம் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.
குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள் - தீயில் கருகிய பள்ளி மாணவி
x
துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, 11ஆம் வகுப்பு படிக்க காத்திருந்தார். எப்போதும் போல், தனது வீட்டின் பின்புறம் குளித்துவிட்டு திரும்பிய அவரை போனில் அழைத்த அதேபகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர், மாணவி குளிக்கும் காட்சியை அவரிடமே காட்டி ஆசைக்கு இணங்கவும், வேலூர் கோட்டைக்கு வரவும் கட்டாயப்படுத்தி உள்ளனர். 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டும் மிரட்டிய, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் செயலால் அதிர்ந்த சிறுமி, தனது சித்தியிடம் நடந்ததை கூறியுள்ளார். ஆறுதல் படுத்திய சிறுமியின் சித்தி, காவல் நிலையம் போகலாம் என கூறியுள்ளார். இதனிடையே, கடந்த 13ஆம் தேதி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் சிறுமி. 

சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், உயிருக்கு போராடிய அவர் கொடுத்த வாக்குமூலம், நெஞ்சை உலுக்குகிறது. பூனைக் கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி ஆகியோர் தன்னை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறிய சிறுமி, அவர்கள் அழைத்த இடத்துக்கு சென்ற தாம், ஒருவனை பிடித்துக்கொண்டு சத்தம்போட மற்ற இருவரும் தப்பியதாக கூறினார். அவனிடம் இருந்த செல்போனை லாவகமாக பறித்த சிறுமி அதில் இருந்த தனது குளியல் காட்சியை அழித்துள்ளார். அதோடு, அந்த செல்போனில், தமது பாட்டி குளிக்கும் காட்சி இருந்ததை பார்த்து உறைந்து போயுள்ளார். இந்த நேரத்தில், திடீரென சிறுமியின் தலையில் கல்லை போட்டுவிட்டு தப்பியுள்ளான் அந்த மூன்றாவது இளைஞன். இதையடுத்து வீட்டுக்கு வந்த சிறுமி, தீவைத்து தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமூலம் அளித்து​ள்ளார். கடந்த 16ஆம் தேதி அவர் இறந்த நிலையில், வீடியோ எடுத்த பூனைக் கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என கூறப்படும் நிலையில், இளைஞர்களின் வக்கிரமான செயலால் ஒரு மாணவியின் உயிர் போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்