லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி - குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனியின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி - குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்
x
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனியின் குடும்பத்தினரை, மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், முதலமைச்சர் பழனிசாமியின் உத்தரவின் படி, 20 லட்ச ரூபாய், அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறி, ஆறுதல் கூறினார். அப்போது ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர் கதறியழுதது காண்போரை கலங்க வைத்தது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், தன்னலம் கருதாமல், ராணுவ வீரர் பழனி, தமது இன்னுயிரை நாட்டிற்காக அர்ப்பணித்து விட்டதாக, மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் புகழாரம் சூட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்