மாணவர் சேர்க்கை பணிகளை நடத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
தமிழக அரசின் உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை பணிகளை தனியார் பள்ளிகள் நடத்தினால், அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அது போன்ற பணிகளை அனுமதிக்கக்கூடாது என்றும் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட பிறகு, பதினோராம் வகுப்பு சேர்க்கை பணிகளை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் நடத்தி வருவதாக கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் உள்ளன. இதையடுத்து மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், இது போன்ற பணிகளை அனுமதிக்கக் கூடாது என்றும் , மாணவர் சேர்க்கைக்காக நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அவசர சுற்றறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது , நேர்முக தேர்வு நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story