4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த்தொற்றை தடுக்க நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.இதன் படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
19-ம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை இந்த முழு ஊரடங்கு இருக்கும் என கூறியுள்ள முதலமைச்சர், சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என கூறியுள்ளார். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்களில், பார்சல் வழங்க மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும் எனஅறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.21 மற்றும் 28 ஆகிய இரு நாட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கூறியுள்ள முதலமைச்சர், வங்கிகள் 33 சதவீத பணியாளர்களுடன் 29, 30ம் தேதிகளில் செயல்பட அனுமதியளித்துள்ளார்.
மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் இயங்கும் என்றும், திருமணம், மருத்துவம், இறப்புக்காக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல தகுந்த ஆதாரம் சமர்ப்பித்தால் மட்டுமே, இ-பாஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.ஊரடங்கு அறிவிக்கப்பட்ட12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கி இருந்து பணிபுரியும் கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டுள்ளார்.ஊரடங்கு காலத்தில், 4 மாவட்டங்களில், குறிப்பிடப்பட்ட பகுதிகளில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒருமுறை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து 12 நாட்களுக்கும் தொழிற்சாலை வளாகம் அல்லது அதன் அருகில் தங்கி பணி புரிய அனுமதி அளிக்கப்படுகிறது.
Next Story