காட்டுத் தீயில் இருந்து காப்பாற்றிய ஊரடங்கு - பசுமையாக காட்சி தரும் மேற்குத் தொடர்ச்சி மலை
ஊரடங்கு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியும் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியும் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் காட்டுத் தீ எரிந்த நிலையில் அதன் பின்பு ஊரடங்கு அறிவிப்பு வெளியான நாட்களில், காட்டுத் தீ ஏற்படவில்லை. கோடைகாலத்தில் எப்போதும் காட்டுத்தீ ஏற்பட்டு பசுமை இழந்து காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியானது, தற்போது ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் யாரும் செல்லாததால், பச்சைப் பசேல் என காட்சியளிக்கிறது. இந்த மலை பகுதியில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story