இ-பாஸ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கியவர்கள் கைது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க இரண்டாயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க இரண்டாயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் திருப்பதி சென்று வர இ பாஸ் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கிடைக்காமல் போனது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரை அணுகி உள்ளார். 2,500 ரூபாய் பணம் கொடுத்தால் இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறியவர்கள் மறுநாள் மேலும் 2500 ரூபாய் கொடுத்தால் தான் தர முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story