விபத்தில் காயமடைந்தவருக்கு கொரோனா..?- மறு பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த 29 வயது நபர் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் சென்னை செல்ல முற்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவருக்கு கொரோனா..?- மறு பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு
x
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த 29 வயது நபர் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் சென்னை செல்ல முற்பட்டுள்ளார். வழியில் திண்டிவனத்தில் விபத்து ஏற்பட்டு காயமடைந்த அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்திருக்கிறது. இதனால் அவர் வசித்த குடியிருப்பு பகுதியே தனிமைப்படுத்தப்பட்டது. அங்குள்ள மேலும் 13 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதியான நபருக்கும் மறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்த நிலையில், திருவிடைமருதூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்