உறவு பாசத்தை வேரறுக்கும் சொத்து தகராறு - 65 வயது தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

வேலூர் அருகே சொத்து தகராறில் உடன்பிறந்த அண்ணனே தம்பியை அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவு பாசத்தை வேரறுக்கும் சொத்து தகராறு - 65 வயது தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்
x
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி-கொல்லைமேடு பகுதியை சேர்ந்த 70 வயது தாமோதரன் மற்றும் 65 வயது தம்பி கிருஷ்ணன் ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இருவரின் நிலத்துக்கும் நடுவே தண்ணீர் ஏற்றும் அறையை தம்பி கிருஷ்ணன் கட்டியுள்ளார். அதை அண்ணன் தாமோதரன் மற்றும் அவரது மகன்கள் இடித்து தரை மட்டமாக்கியுள்ளனர். இதுகுறித்து கேட்டதால், தகராறு ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணனை அவரது அண்ணன் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். இதனால், நிலைகுலைந்த தம்பி கிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பலத்த காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய தாமோதரன் தரப்பை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்