ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சென்னையில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசு தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கை உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் , ஊரடங்கை தளர்த்தினால் சென்னை மக்களுக்கு ஈடு செய்ய முடியாத ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
Next Story