சரக்கு ரயிலில் தனிப்பெட்டியில் குடும்பத்துடன் வந்த அதிகாரி
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த சரக்கு ரயிலில் தனிப்பெட்டியில் குடும்பத்துடன் ரயில்வே உயர் அதிகாரி வந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் சிக்னல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை பொறியாளராக இருப்பவர் பாஸ்கரன். இவர் சென்னையிலிருந்து மதுரை வரும் சரக்கு ரயிலில் தனிப்பெட்டி மூலம் குடும்பத்துடன் மதுரை வந்துள்ளார். அவர் வந்த பெட்டியை மட்டும் மதுரையில் இறக்கிவிட்டு சரக்கு ரயில் சென்ற நிலையில் ரயில்வே குடியிருப்பு அருகில் உள்ள விருந்தினர் விடுதியில் பாஸ்கரன் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு ரயில் குடியிருப்பிலிருந்து ரஞ்சித் என்பவர் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து ரயில்வே விருந்தினர் குடியிருப்பில் உள்ள தலைமை பொறியாளர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story