சொந்த ஊருக்கு சென்ற ஒரு லட்சம் தொழிலாளர்கள்
சென்னையில் வேலை பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஒரு லட்சம் பேர், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் தங்கி கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் சுமார் 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுத்து, இதுவரை சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களை அனுப்பி வைத்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 2 ரயில்கள் மூலம் ஒரு லட்சத்து 439 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மொழிப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரயில் நிலையங்களில் இந்தி மொழி தெரிந்த காவலர்களை பணிக்கு அமர்த்தி, பயணத்துக்கு உதவி செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். காவல் நிலையங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கப்பட்டதுடன், இந்தி மொழியில் கால் சென்டர் அமைத்து தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story