சட்டவிரோத மின்மோட்டார் குறித்து புகார் தெரிவித்தவர் கொலை - கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றங்கரைகளில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்மோட்டார்கள் குறித்து புகார் தெரிவித்தவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றங்கரைகளில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்மோட்டார்கள் குறித்து புகார் தெரிவித்தவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரசாந்த், வீடியோ காண்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பளித்தார்
Next Story