தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வீடுகளுக்கு சென்று ஊதியம் வழங்கும் திட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 8 ஆயிரத்து 800 வங்கி முகவர்கள் மூலம் பணியாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று ஊதியம் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு துவங்கி உள்ளது.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுகான ஊதியத்தினை அவரவர் வீடுகளுக்கு நேரில் சென்று வங்கி முகவர்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ,கனரா வங்கி மற்றும் பிற வங்கிகளில் உள்ள 8 ஆயிரத்து 800 முகவர்கள் மூலம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் நேரடியாக வழங்கப்பட உள்ளது.
Next Story