10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வலியுறுத்தல் - திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வேண்டுகோள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போதைக்கு நிறுத்த கோரி, நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவதில், முதலமைச்சர் வறட்டுப் பிடிவாதம் பிடிப்பதாக திமுக மற்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில், நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுத்தேர்வுக்காக 9 லட்சம் மாணவர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும் வெளியில் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுத வேண்டும் என கூறுவது இரக்கமற்ற செயல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தற்போதைக்கு நிறுத்த கோரி, நாளை கண்டன ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
Next Story