பேச்சிப்பாறை அணையில் இன்று முதல் 28ம் தேதி வரை தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்ப பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்ப பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பின் மூலம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 28ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தேவைக்கேற்ப, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து பொறுத்து, பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை சிற்றார் ஒன்று மற்றும் சிற்றார் இரண்டு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட இருக்கிறது.
Next Story