மருத்துவ இடஒதுக்கீடு - அறிக்கை சமர்ப்பிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சமர்ப்பித்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சமர்ப்பித்தது.
* நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இருந்து வருகிறது.
* இதனை கருத்தில் கொண்டு, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
* இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் 21ம் தேதி தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.
* இந்தக் குழுவானது பலமுறை கூடி, ஆராய்ந்து இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை தயார் செய்துள்ளது.
* இந்நிலையில் அந்த அறிக்கையை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், குழுவினர் தாக்கல் செய்தனர்.
* இந்த அறிக்கையின் அடிப்படையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Next Story