"அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்திற்கு மழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியும் என கூறப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், 10,11ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story