திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமக்களை பிரித்த கொரோனா

சென்னையில் இருந்து விருதுநகர் வந்த மாப்பிள்ளைக்கு தொற்று உறுதியானதால், திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமக்களை, கொரோனா பிரித்தது.
திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமக்களை பிரித்த கொரோனா
x
சென்னையில் இருந்து விருதுநகர் வந்த மாப்பிள்ளைக்கு தொற்று உறுதியானதால், திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமக்களை, கொரோனா பிரித்தது. தாம்பரத்தை சேர்ந்த முகமது ஷரிப்க்கும், விருதுநகரைச் சேர்ந்த நஜிமாபானு என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப் பட்ட பின், நஜிமாபானு வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விருதுநகர் வந்த முகமது ஷரிபிற்கு, மாவட்ட எல்லையில் ரத்த மாதிரியை எடுக்கப்பட்டது. பின்னர், முகமது ஷரிப்பிற்கும், நஜிமா பானுவிற்கும் எளிய முறையில் திருமணம் நடந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே மணமகனுக்கு தொற்று இருப்பது உறுதியானதால், அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்