ஜெ.அன்பழகன் உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஜெ.அன்பழகன் உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
x
ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரி​ன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ​திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்த ஸ்டாலின், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவ குழுவிடம் கேட்டறிந்தார். மருத்துவர்களுடனான இந்த சந்திப்பின் போது,  திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்