பகல் 11.30 முதல் மாலை 3.30 வரை வெளியில் நடமாட வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

வங்கக்கடலில் ஏற்பட்ட அம்பன் புயல் கடற்கரையில் இருக்கும் ஈரப்பத காற்றையும் சேர்த்து சுழற்றி சென்றதால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.
பகல் 11.30 முதல் மாலை 3.30 வரை வெளியில் நடமாட வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
x
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 42 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சியில் 41 புள்ளி 4 டிகிரி செல்சியஸும், சென்னை மீனம்பாக்கம் பகுதியில் இயல்பை காட்டிலும் 3 புள்ளி 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து,  42 புள்ளி 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியது.மதுரையில் 41 புள்ளி 2 டிகிரி செல்சியஸ் , வேலூரில் 41 டிகிரி செல்சியஸ் , கடலூரில்  40 டிகிரி செல்சியஸ் என தமிழகத்தின் பல நகரங்களில் இயல்பை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு வடமாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடுமையான அனல் காற்று வீச வாய்ப்பு இருப்பதால் பகல்   11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்