உள்ளூர் விமான சேவை வருகிற 25-ல் துவக்கம் - வழிமுறைகளை வெளியிட்ட விமான நிலைய ஆணையம்

உள்ளூர் விமான சேவை வருகிற 25 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் விமான நிலையங்கள் மற்றும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
x
இந்திய விமானநிலைய ஆணையம்,  வெளியிட்டுள்ள அறிக்கையில் விமான நிலைய கட்டிடத்திற்குள் பயணிகள் நுழைவதற்கு முன்பு அதிகாரிகள் கிருமி நாசினி தெளித்து தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விமான நிலைய முனைய கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகள் தெர்மல் ஸ்கேனிங் வழியாக நடப்பது கட்டாயம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரம் முன்னதாக பயணிகள் வந்து விட வேண்டும் என்றும், பெரிய அளவிலான சூட்கேஸ்களை தவிர்த்திட வேண்டும் மற்றும் முக கவசத்துடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வழிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் ஆரோக்ய சேது செயலியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், அதி​ல் பயணிக்கு கொரோனா தொற்று இல்லை என்ற தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்