நாளுக்கு நாள் சரிவடைந்த டாஸ்மாக் விற்பனை - டாஸ்மாக் நிறுவனம் தகவல்
கடந்த நான்கு நாட்களில் மாநிலம் முழுவதும் 495.4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு கட்டுபாடுகளுடன் மது விற்பனை தமிழக முழுவதும் மீண்டும் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. சென்னை மாநகரம் உள்ளிட்ட சிவப்பு மண்டல பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
* முதல் நாளான 16 ஆம் தேதி 163 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது நாளான 17 ஆம் தேதி 133.1 கோடி ரூபாய்க்கும் மூன்றாம் நாளான18 ஆம் தேதி108.3 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது.
* முதல் நாளான 16 ஆம் தேதி சென்னை மண்டலத்தில் 4.2 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 40.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 44.7 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 41.07 கோடி ரூபாய்க்கும் கோவை மண்டலத்தில் 33 .05 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
* இரண்டாவது நாளான 17 ஆம் தேதி சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும்,
மதுரை மண்டலத்தில்34.8 கோடி ரூபாய்க்கும் சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும் கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளன.
* 28 கோடி ரூபாய் விற்பனை உடன் மூன்றாவது நாளான 18 ஆம் தேதி தமிழகத்தில் மதுரை மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மது வாங்க வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்பட்டதும், மது விற்பனை நேரம் மாலை 7 மணி வரை நீட்டிப்பாலும் விற்பனை அதிகரிப்பு என கூறப்படுகிறது.
* சென்னை மண்டலத்தில் ரூ.6.5 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 26.4 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 28.6 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில்24.3 கோடி ரூபாய்க்கும் , கோவை மண்டலத்திவ் 22.5 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்று உள்ளது.
* தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 91 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் 6.2 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 23.2 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 22.2 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்திவ் 20.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 19.4 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது.
* கடந்த நான்கு நாட்களாக தமிழக முழுவதும் 495.4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டாலும், கடந்த நான்கு நாட்களில் விற்பனை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story