அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றது, ஆம்பன் புயல் - மே 20-ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்கிறது, ஆம்பன் புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று, உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெறுகிறது.
புதுச்சேரிக்கு கிழக்கே சுமார் 680 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மிக அதிதீவிர புயலாக இன்று வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிதீவிரமாக வலுவடையும் இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்கத்தின் டிகா துறைமுகம் - வங்கதேசத்தின் ஹாதியா தீவுகள் இடையே மே 20-ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 24 மணிநேர்த்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். வங்க கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம்பன் புயல் மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என்பதால் அங்கு 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
Next Story