கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - 9 மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார்
கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவியை, ஒன்பது மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்
கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவியை, ஒன்பது மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.விருத்தாசலம் அருகே இருப்பு கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில், கடந்த 9 மாதங்களுக்கு முன், எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்,இறந்த நபர், கடலூர் மாவட்டம் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி சுதாவிடம் நடத்திய விசாரணையில்,அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரிய வந்தது.அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story