எலி மருந்து சாப்பிட்டு பள்ளி மாணவி தற்கொலை: காரணம் என்ன ? - போலீஸ் விசாரணை
திருவாரூர் அருகே வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கபட்ட பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி , வயல்வெளியில் சடலமாக கிடப்பதாக கடந்த 8 ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விசாரணையில், கடந்த 7 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தனது வீடு இருக்கும் அதே தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு உறங்க செல்வதாக கூறி மாணவி வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில் மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ள நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story