தென்காசியில் லாரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பீடி இலை ஏற்றி வந்த லாரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பீடி இலை ஏற்றி வந்த லாரி ஓட்டுனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 100 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறிகடைகளை தவிர்தது அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
Next Story