"டாஸ்மாக்கை திறக்கும் அறிவிப்பை திரும்பபெற வேண்டும்" - தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தல்

தமிழக அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் தனது அறிவிப்பை மறு சிந்தனை செய்து திரும்ப பெற வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக்கை திறக்கும் அறிவிப்பை திரும்பபெற வேண்டும் - தமிழக பாஜக தலைவர் முருகன் வலியுறுத்தல்
x
தமிழக அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் தனது அறிவிப்பை மறு சிந்தனை செய்து திரும்ப பெற வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு தமிழக அரசு மாற்று வருமானத்திற்கு வழிதேடினால் அதற்கு பாஜக எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய இந்த நிலையில், உடலையும் உள்ளத்தையும் பலவீனமாக்கும் ஒரு போதைக்கு மக்களை தள்ளுவது வேடிக்கையான வேதனை எனவும் எல்.முருகன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்