கரூரில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வசித்த பள்ளிபாளையம் தேவாங்கபுரம், ஆண்டிகாடுக் காடு, ரங்கனூர் ஆகிய பகுதிகளில் சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story