தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் பலர் மதுப்பழகத்தை கைவிட்டுள்ளதாக கூறி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என சென்னையை சேர்ந்த ஆர். தனசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மதுக்கடைகள் மூடப்பட்ட போதிலும் கள்ளச்சாராய விற்பனை பெரிதாக இல்லை எனவும், குற்றங்கள் குறைந்து வருவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா அமர்வு, அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story