கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு - 67 வயது முதியவருக்கு வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு  - 67 வயது முதியவருக்கு வைரஸ் தொற்று உறுதி
x
வேப்பனப்பள்ளி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த அவர், கடந்த இரண்டு மாதங்களாக ஆந்திராவில் பணியாற்றினார். கடந்த மாதம் 25ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய முதியவர் உள்பட 5 பேரை னார். மாவட்ட எல்லையிலேயே போலீசார் மடக்கிபிடித்தனர். முதியவர் உள்பட 5 பேரையும் தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 67-வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அந்த நபர் சேலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரில், முதல் கொரோனா பாதிப்பு பதிவானதை தொடர்ந்து, தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த அந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்