கோயம்பேட்டில் இருந்து சென்ற 20 பேருக்கு கொரோனா - 2 சிறுவர்களுக்கும் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் முகாமில் இருந்து வீடு திரும்பிய மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து சென்ற 20 பேருக்கு கொரோனா - 2 சிறுவர்களுக்கும் பாதிப்பு
x
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குணம், சொக்கநாதபுரம், சிறுகளத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து லாரிகளில் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்களை மடக்கி முகாம்களில் தங்க வைத்த நிலையில், நேற்று அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதனிடையே, அந்த 40 பேரில், 19 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது இன்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களின் வீடுகளுக்கு சென்று அனைவரையும் பிடித்து மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, கொரோனா தொற்று இருந்த 8  பேர், தற்போது 20 பேர் உள்பட 28 பேருடன், ஆரஞ்ச் மண்டலத்தில் இருந்த அரியலூர் மாவட்டம் தற்போது சிவப்பு மண்டலமாக மாற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்